/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் குழந்தைகளின் தனி திறனை மேம்படுத்த அறிவுரை
/
பெண் குழந்தைகளின் தனி திறனை மேம்படுத்த அறிவுரை
ADDED : செப் 12, 2025 08:09 PM

பந்தலுார்,; 'பெண் குழந்தைகளின் தனி திறமைகளை மேம்படுத்த, ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோரும் முன்வர வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே தேவாலா புனித அந்தோணியார் தேவாலயத்தில், பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
முன்னதாக மறைபரப்பு பணி நிலைய இயக்குனர் பாதிரியார் பெரியநாயகம், தேவாலய பாதர் வில்சன் தலைமையில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பெண்கள் பணிக்குழு செயலாளர் குணசீலா முன்னிலையில், மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, பாடல் போட்டிகள் நடந்தது.
தொடர்ந்து, பாதிரியார் பெரியநாயகம் பேசுகையில், ''கடந்த காலங்களில் பெண்களுக்கான சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது பெண்கள் இல்லாத துறைகளே கிடையாது என்ற அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோரும், தங்கள் பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டு தெரிந்து, நட்புணர்வுடன் கண்டிப்பு மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும்.
அதேபோல், பெண் குழந்தைகள் எந்த துறையில் சாதிக்க ஆர்வம் உள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப அவர்களை படிக்க வைத்து சமுதாயத்தில் உயர அனைவரும் முன்வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.