/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் ஆக்ரோஷமாக வரும் கரடியால் மக்களுக்கு ஆபத்து இதுவரை 12 வீடுகளின் கதவுகள் உடைப்பு

ADDED : ஏப் 17, 2025 09:55 PM

குன்னுார், ; குன்னுாரில் ஆக்ரோஷமாக வந்து குடியிருப்பு கதவுகளை உடைத்து உள்ளே செல்லும் கரடி பொருட்களை சேதம் செய்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுாரில் சமீப காலமாக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கரடிகள் ஆட்கள் இல்லாத குடியிருப்புகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடி வந்தன.
இந்நிலையில், ஹாட்லி சாலையில், உள்ள சீனியர் சீட்டிசன் ஒருவரின் வீட்டு கதவை உடைத்து கரடி உள்ளே புகுந்து பொருட்களை சேதம் செய்ததால், வனத்துறையினர் குடியிருப்பு கதவு அருகே கூண்டு வைத்தனர்.
எனினும், நேற்று காலை கூண்டில் இருந்த உணவை உட்கொள்ள செல்லாமல், மீண்டும் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி, பிற அறைகளின் இரு கதவுகளையும் உடைத்து தாக்கியுள்ளது.
இதே பகுதியில் இதுவரை, 12 வீடுகளின் கதவுகளை இந்த கரடி உடைத்துள்ளது.
ஆக்ரோஷத்துடன் உலா வரும் கரடியால் மக்களுக்கு அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.