/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பம்ப் செட்டுகளை மொபைல் போனில் இயக்க விவசாயிகளுக்கு மானியம் பயன்பெற வேளாண் பொறியியல் துறை அழைப்பு

ADDED : டிச 06, 2024 05:38 AM
ஊட்டி, : வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு மொபைல் போனில் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிகள் மற்றும் புதிய மின் மோட்டார்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை :
விவசாயிகளுக்கு இரவு மற்றும் மழை காலங்களில் தோட்டங்களில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கும்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு மொபைல் போனில் இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து இயக்கிடவும், நிறுத்திடவும் முடியும்.
இதற்காக, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 7000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில், 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும், பழைய மின் மோட்டாரை மாற்றிவிட்டு புதிய மின் மோட்டாரை வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக, 15,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை, ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் உபகோட்ட அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் கொடுத்து பயன் பெறலாம். மேலும், விபரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஊட்டி- 0423--2443734; உதவி செயற்பொறியாளர்கள் ஊட்டி- 0423--2960257; குன்னுார்-- 0423--2961550 ;கூடலுார்-- 04262 --296599 அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.