ADDED : டிச 22, 2025 05:32 AM

ஊட்டி: ஊட்டியில் நீலகிரி மாவட்ட பா.ஜ., விவசாய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் பங்கேற்று, நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், ஜன., 4, 5ம் தேதிகளில் விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மத்திய வேளாண் துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும், சிறுதானிய பொங்கல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மாநிலத்தில், பா.ஜ., விவசாய அணி பலமாக உள்ளது. இங்கு, மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள 'ஆத்மா' திட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் தரவில்லை. மக்களுக்கு செல்ல வேண்டிய இந்த நிதியை, மாநில அரசு கட்சி பணிக்கு பயன்படுத்துகிறது.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக, மத்திய அரசு, 1,300 கோடி வழங்குகிறது. நாய்களுக்கு கருத்தடை செய்வதில் கூட, தி.மு.க.. அரசு ஊழல் செய்கிறது. அரசு தரும் ஆயிரம் ரூபாயை பெண்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பணம் குடிப்பதற்கு செல்கிறது. மதுவை ஒரு தொழிலாக செய்து வருகிறது. வரும் தேர்தலில் இந்த அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.
தேர்தல் ஆணையத்தால், 97 லட்சம் ஒட்டுகள் நீக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுக்களை வைத்து தான், தி.மு.க., அரசு ஓட்டு வங்கியாக மாற்றி வந்தது. இனி கள்ள ஓட்டு போட்டு தி.மு.க., ஜெயிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

