/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழு பாடலுடன் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
/
குழு பாடலுடன் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 22, 2025 05:27 AM
குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லுாரி மாணவ, மாணவியர் சார்பில் குடில் அமைக்கப்பட்டது. இறை துாதர், மூன்று ராஜாக்கள், தேவ துாதர்கள் நட்சத்திரம் அணிந்த மாணவியர் அணிவகுத்து வந்தனர்.
இதே போல, பாரம் பரிய வேடமணிந்திருந்த பேராசிரியர்களின் பேஷன் ஷோ நடத்தப்பட்டது. தொடர்ந்து குழு நடனம், தனிநபர் பாடல் இடம் பெற்றது. எல்.இ.டி., விளக்குகள் பொருத்திய உடை அணிந்து வந்த மாணவியரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. கல்லுாரி பேராசிரியைகள் குழுவாக, கிறிஸ்து பாடல்களை பாடினர்.
விழாவில், கல்லுாரி செயலாளர் சிஸ்டர் அல்போன்சா, சுப்பீரியர் ஜானெட், சிஸ்டர்கள் தெரெசா , செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா கிறிஸ்துமஸ் குறித்து பேசினார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

