/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஊட்டியில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, ;ஹிந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி ஏ.டி.சி.,யில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. , மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி இணை செயலாளர் பாலநந்தகுமார் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.