/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய் பொருத்த மறுப்பதாக குற்றச்சாட்டு
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய் பொருத்த மறுப்பதாக குற்றச்சாட்டு
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய் பொருத்த மறுப்பதாக குற்றச்சாட்டு
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய் பொருத்த மறுப்பதாக குற்றச்சாட்டு
ADDED : பிப் 16, 2024 12:25 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி, 11 வது வார்டு பகுதியில் சேரம்பாடி சுங்கம் பகுதி அமைத்துள்ளது. இந்த பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சாலை ஓரத்தில் அமைந்துள்ளன.
இங்கு போதிய குடிநீர் வசதி இல்லாத நிலையில்,மத்திய அரசின் 'ஜல்ஜீவன்'திட்டத்தின் கீழ், இங்குள்ளவீடுகளுக்கு குடிநீர் குழாய்இணைப்பு வழங்க பொதுமக்கள் வலியுறுத்தினர். இத்திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற, நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் இந்த பகுதிக்கு குடிநீர் குழாய் பொருத்த மறுத்து வருகிறது. இதனால், இந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல்சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கவுன்சிலர் பிரமிதா கூறுகையில், ''மத்திய அரசு மூலம் அனைத்து குடியிருப்புகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் குடிநீர், விநியோகம் செய்யப்பட வேண்டிய நிலையில், வசதி படைத்தவர்கள் வீடுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பகுதி மக்களை பழிவாங்கும் வகையில், ஊராட்சி நிர்வாகம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் அமைக்க மறுத்து வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது,'' என்றார்.