/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேஷன் கடைகளில் தரமில்லாத ராகி வழங்குவதாக குற்றச்சாட்டு
/
ரேஷன் கடைகளில் தரமில்லாத ராகி வழங்குவதாக குற்றச்சாட்டு
ரேஷன் கடைகளில் தரமில்லாத ராகி வழங்குவதாக குற்றச்சாட்டு
ரேஷன் கடைகளில் தரமில்லாத ராகி வழங்குவதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 03, 2025 08:03 PM

குன்னுார்; நீலகிரியில் ராகி வாங்குவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்த போதும், ரேஷன் கடைகளில், தரமில்லாமல் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், கடந்த 2023ல் முதல் முறையாக, நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக, 2 கிலோ ராகி (கேழ்வரகு) இலவசமாக வழங்கப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சிறுதானியங்களை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும், மத்திய அரசின் உதவியுடன், இந்திய உணவு கழகத்தின் மூலம், ரேஷன் கடைகளில் ராகி வினியோகம் செய்யப்படுகிறது. இதனை, அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்த போதிலும், தரமில்லாத ராகி ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''கிராம மக்களிடையே ராகியை வாங்குவதற்கு ஆர்வம் இருந்த போதும், தரமில்லாமல் வழங்கப்படுகிறது. ராகியில் சிறு கற்களுடனும் காணப்படுகின்றன. குன்னுார் ரேஷன் கடைகளில் தரமில்லாத ராகி தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.
ஏற்கனவே புகார்கள் தெரிவித்த போது கர்நாடக கொள்முதலை தவிர்த்து, தமிழகத்தின் ராகி கொள்முதல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அரசு, மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதால், தரமான ராகி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.
நீலகிரி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், 'இந்திய உணவு கழகத்தின் மூலம் தர ஆய்வு மேற்கொண்டு வழங்கப்படுகிறது. கழக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,' என்றனர்.