/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்

ADDED : டிச 31, 2025 08:01 AM

குன்னூர்: குன்னூர் சேலாஸ் சிறு மலர் உயர்நிலை பள்ளியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் ஹேன்குமார்தலைமை வகித்தார். யோகேஸ்வரன், பால தண்டபாணி முன்னிலை வகித்தனர். சங்கரலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியை ரமணி தொகுத்து வழங்கினார். பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
பள்ளியில், பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில், இறந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுள அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக, முன்னாள் மாணவர்கள் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
தற்போது, மாணவர்களுக்காக ஸ்மார்ட் போடு நன்கொடை வழங்கப்பட்டதை முன்னாள் ஆசிரியர் சிஸ்டர் வர்ஜினியா துவக்கி வைத்து பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தங்களதுபழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப் பட்டன.
பள்ளியில் பயின்று காவல்துறையில் பணியாற்றும் முன்னாள் மாணவர் விபத்தில் உடல் அளவில் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்து, 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், புதிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.