/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கும்மியாட்டத்தில் அசத்திய பெண்கள்
/
கும்மியாட்டத்தில் அசத்திய பெண்கள்
ADDED : பிப் 06, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:கணுவக்கரையில், 130 மகளிர் மூன்று மணி நேரம் கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.
அன்னுார் வட்டாரத்தில், கிராமங்களில், கும்மியாட்டத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
சிகரம் கலைக்குழு சார்பில், ஏழாவது வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா கணுவக்கரை, மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 30 நாள் பயிற்சி பெற்ற, 130 சிறுமியர் மற்றும் பெண்கள், அரங்கேற்றத்தில் மூன்று மணி நேரம் நடனமாடி அசத்தினர்.சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.
வள்ளி, கும்மி ஆசிரியர்கள் ஆசிரியைகள் கலைச்செல்வி, சவுந்தர்யா கவுரவிக்கப்பட்டனர்.