கல்லார் சோதனை சாவடியில் தெளிவில்லாத டிஜிட்டல் போர்டு
கல்லார் சோதனை சாவடியில் தெளிவில்லாத டிஜிட்டல் போர்டு
ADDED : ஆக 17, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை கல்லார் சோதனை சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு இ---பாஸ் நடைமுறை உள்ளது.
இதனை முறைப்படுத்தி மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்வது குறித்தும் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
சோதனை சாவடி வழியே வரும் வாகனங்களை விரைவாக சரிபார்த்து அனுப்பவும் அறிவுறுத்தினார். டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளில் தகவல்கள் சரிவர தெளிவில்லாமல் இருந்த நிலையில் உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட எஸ்.பி., பிருந்தா மாவட்ட வன அலுவலர் கஷாப்சாங் ரவி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அபிலாஷா கவுர் உட்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
