தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அம்மனுக்கு வளைகாப்பு பூஜை

அம்மனுக்கு வளைகாப்பு பூஜை

அம்மனுக்கு வளைகாப்பு பூஜை


UPDATED : ஆக 16, 2026 06:26 PM

ADDED : ஆக 16, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 06:26 PM ADDED : ஆக 16, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்:பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில், அம்மனுக்கு பக்தர்கள் வளைகாப்பு நடத்தி பூஜை செய்தனர்.

பொன்னானி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள், அம்மனுக்கு வளைகாப்பு பூஜை செய்தனர்.

இதில் அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து, வடை, பாயசத்துடன், ஐந்து வகை உணவுகள் சமைத்து அம்மனுக்கு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து அம்மன் வீதி உலா நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் சண்முகம் செய்தார். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கோவில் மகளிர் குழுவினர் இணைந்து செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us