ADDED : ஆக 16, 2026 06:00 PM
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் அரசு அலுவலர்கள், மக்கள், போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்தனர்.
வன விலங்கு பாதிப்பு உட்பட நீண்ட காலமாகி தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் வலியுறுத்தினர்.
மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சியில் நடந்து வரும் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றது.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அபிலாஷா கவுர், மகளிர் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், கால்நடை பராமரிப்பு துறை அலுவலர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ஊராட்சி உதவி இயக்குநர் பஷீர் அகமத் உட்பட பலர் பங்கேற்றனர்.
