ADDED : ஆக 16, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலூர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் தலைமையில், வந்தே மாதரம் பாடலுடன் தேசிய கொடி ஏற்றி வைத்து, மரக்கன்றுகளை நடவு செய்தனர். வக்கீல்கள் சிவசுப்பிரமணியம், சவுக்கத், கணேசன், ஜான்சன், எஸ்.ஐ. ரவி மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
--
நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சிவகாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். ஆணையாளர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் சேகர், ஆலன், சாந்தி, பன்னீர்செல்வம், வியாபாரிகள் சங்க தலைவர் அஷ்ரப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
