/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நரபலி நடந்ததை போல காணப்பட்ட குழியால் பரபரப்பு: வருவாய் துறை ஆய்வுக்கு பின் நிம்மதி

ADDED : டிச 10, 2025 08:12 AM
ஊட்டி: ஊட்டி பழைய எஸ்.பி.,அலுவலகம் அருகே குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது போல் காணப்பட்ட குழியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழைய எஸ்.பி., அலுவலகம் மற்றும் வனத்துறை அலுவலகங்கள் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான பகுதியில் பராமரிப்பில்லாத புதர் மண்டி கிடக்கும் இடம் உள்ளது.
இந்த இடத்தில் மயானத்தில் இறந்த குழந்தை உடலை புதைத்தது போல் காணப்பட்டதை கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் ஆர்.டி.ஓ., டினு அரவிந்த் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். குழந்தை இறந்து புதைப்பது போன்ற அமைப்பில் இருந்ததால் குழந்தை ஏதாவது நரபலி கொடுக்கப்பட்டு இங்கு புதைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
பின்பு அதே பகுதியில் நந்தகுமார் என்பவருடைய மாமியார் லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார்.
அவருடைய அஸ்தியை குழி தோண்டி புதைத்து அதற்கு பூஜை செய்ததாக, மூதாட்டியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஊட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.