/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை கவனமுடன் செல்ல அறிவுரை
/
குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை கவனமுடன் செல்ல அறிவுரை
குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை கவனமுடன் செல்ல அறிவுரை
குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை கவனமுடன் செல்ல அறிவுரை
ADDED : பிப் 22, 2024 11:29 PM

கூடலூர்:கூடலூர், கோழிக்கோடு சாலையோரம், குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர், முதுமலை வனப் பகுதியில், கோடைக்கு முன்பாக வறட்சி துவங்கி உள்ளதால், வன விலங்களுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு தேடி, நீர் ஆதாரங்கள் உள்ள பசுமையான வனப்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இரவில் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடோன் -- நாடுகாணி இடையே, கோழிக்கோடு சாலையை ஒட்டிய, வனப்பகுதியில் குட்டியுடன் காட்டு யானை நேற்று, காலை முதல் முகாமிட்டுள்ளது.
வாகனங்களை தாக்கும் அபாயம் உள்ளதால், யானைகள் சாலைக்கு வராத வகையில், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை, சாலைக்கு வந்து, வாகனங்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க கண்காணித்து வருகிறோம்.
வாகன ஓட்டிகள் யானைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், வாகனங்களை இயக்க வேண்டும்.' என்றனர்.