/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூக்கல் தொறையில் துார்வாரப்படாத ஓடை; மழை நீரை சேகரிப்பதில் சிக்கல்
/
கூக்கல் தொறையில் துார்வாரப்படாத ஓடை; மழை நீரை சேகரிப்பதில் சிக்கல்
கூக்கல் தொறையில் துார்வாரப்படாத ஓடை; மழை நீரை சேகரிப்பதில் சிக்கல்
கூக்கல் தொறையில் துார்வாரப்படாத ஓடை; மழை நீரை சேகரிப்பதில் சிக்கல்
ADDED : நவ 06, 2024 09:32 PM

கோத்தகிரி ; கோத்தகிரி கூக்கல் தொறையில் உள்ள ஓடை துார்வாரப்படாமல் உள்ளதால், மழை நாட்களில் தண்ணீரை சேகரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
கோத்தகிரி அருகே, கூக்கல்தொறை பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், மழை காய்கறிகளான, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ் மற்றும் உருளை கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தவிர, இங்கிலீஷ் காய்கறிகளும் பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
இங்குள்ள விவசாயிகளுக்கு, கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கூக்கல் தொறை நீர் பிடிப்பு பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த நீர்ப்பிடிப்பு பகுதி துார் வாரப்படவில்லை. இதனால், ஓடையின் இருபுறங்களிலும், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, அகலமும் ஆழமும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது பெய்து வரும் மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வறட்சி நாட்களில், காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத அளவுக்கு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், விவசாயிகள் நலன் கருதி, மழை நீரை முழுமையாக சேகரிக்க ஏதுவாக நீர் ஆதாரத்தை துார்வார நடவடிக்கை எடுப்பது அவசியம்.