/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர்கள் கைது
/
மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர்கள் கைது
ADDED : ஜன 07, 2026 05:29 AM
ஊட்டி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில் மறியலில் ஈடுபட முயன்ற, 330 பேரை போலீசார் கைது செய்தனர்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவதாக, முதலமைச்சரின் வாக்குறுதி, 313ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம், ஊட்டியில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார்.
அதில், 'அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; குடும்ப ஓய்வூதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும்.
மினி மையங்களில் இருந்து, பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கான ஒரு 'இன்கிரிமென்ட்' வழங்க வேண்டும்; காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கடந்த, 1993ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 100 சதவீதம் பதவி உயர்வை வழங்க வேண்டும்,' என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற, 330 பேரை போலீசார் கைது செய்தனர்.

