/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் பரிசு தொகுப்பு; 13ம் தேதி வரை வினியோகம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு; 13ம் தேதி வரை வினியோகம்
ADDED : ஜன 07, 2026 05:29 AM
ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், 2 லட்சத்து, 18 ஆயிரத்து, 578 அரிசி வாங்கும் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாளை (8ம் தேதி) துவங்கி, 13ம் தேதி வரை, சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும், ரேஷன் கடைகள் திறந்திருக்கும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை ரேஷன் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோரை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும். புகார்கள் இருப்பின், 0423-2441216 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

