/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
/
ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
ADDED : நவ 06, 2025 11:05 PM

ஊட்டி:- நீலகிரியில் ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, அனைத்து ஈஸ்வரன் கோவில்களிலும், இறைவனுக்கு அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தில், சிவன் கோவில்களில் இறைவனுக்கு அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம்.
நேற்று முன்தினம், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, ஊட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவில்களிலும், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, அலங்காரம் நடந்தது.
அதேபோல், ஊட்டி பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள சிவன், அன்னமலை முருகன் கோவிலில் கோவில் ஸ்தாபர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் அன்னாபிஷேகம் நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

