/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதைகள் வாங்க புரோக்கர்கள் வேண்டாம்!
/
விதைகள் வாங்க புரோக்கர்கள் வேண்டாம்!
ADDED : நவ 06, 2025 11:06 PM
ஊட்டி: இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். பாகற்காய் விதைகள் வாங்கும்போது கட்டாயம் விற்பனை ரசீது பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 'விவசாயிகளுக்கு தேவையான பாகற்காய் விதைகள் விதை உரிமம் பெற்ற விற்பனை கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.
விற்பனை கடைகளில் விதைகள் வாங்கும் போது முளைப்புத்திறன் சான்று மற்றும் பதிவுச் சான்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாகற்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து பயிர் செய்து பயன் பெறலாம்.
விதைகள் வாங்கும் போது, விற்பனை ரசீது அனைத்து விபரங்களுடன் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்' என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், '' விவசாயிகளுக்கு பாகற்காய் விதைகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் கட்டாயமாக விதை சட்டத்தின்படி பதிவுச்சான்று, முளைப்புசான்று மற்றும் விதைகள் கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக அனைத்து விபரங்களையும் இருப்பு பதிவேட்டில் எழுத வேண்டும்.
இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தால் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருப்பின் விவசாயிகள் ஊட்டி விதை ஆய்வாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்க லாம்,'' என்றார்.

