தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்


ADDED : அக் 25, 2026 04:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 04:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர், முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம் விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கூடலூர், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில் 11ம் ஆண்டு அன்னாபிஷேக திருவிழா இன்று (அக்.,25), சிறப்பாக நடந்தது. காலை 5:00 கணபதி ஹோமம், காலை,11.30 மணிக்கு லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று லிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நந்தட்டி மாதேஸ்வரன் கோவிலில், அன்னாபிஷேகம் பூஜை சிறப்பாக நடந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

* ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பந்தலூர் முருகன் கோவிலில் இன்று காலை முதல் முருகனுக்கு கோவில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. பெண் பக்தர்கள் பங்கேற்று பிரதோஷ வழிபாடு பாடல்களை பாடி இறைவழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன் தலைமையிலான நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

-* உப்பட்டி அருள்மிகு செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகளும், சிவபெருமானுக்கு அன்னாபிஷேக பூஜையும் கோவில் அர்ச்சகர் சுந்தர்ராஜ் தலைமையில் நடந்தது. கோவில் கமிட்டி தலைவர் செந்தில்வேல் தலைமையிலான நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அன்னாபிேஷகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us