ADDED : பிப் 16, 2026 06:21 AM

கோத்தகிரி: அரசு உயர்நிலைப் பள்ளி மிளிதேன் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா கலை நிகழ்ச்சியுடன் விமரிசையாக நடந்தது.
தலைமையாசிரியர் ஷைனி தலைமை வகித்தார்.
மிளிதேன் ஊர் தலைவர் பில்லன் முன்னிலை வகித்தார். மாணவர்களின் திறமையும் தரமும் வெளிப்படும் விதமாக கலை நிகழ்ச்சிகள், கராத்தே நிகழ்வுகள் பார்வையாளர்களை கவர்ந்தது. இதில், கராத்தே பயிற்சி மாணவர்கள் தற்காப்பு கலையை மிகச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்கள். 10 ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வட்டார, மாவட்ட, மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 1330 திருக்குறளை ஒப்புவித்து, பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி நான்சி அபிகாயிலுக்கு கலை அரசி விருது வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இம்பேக்ட் அமைப்பு தூரிகை டிரஸ்ட் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

