UPDATED : நவ 15, 2026 06:48 PM
ADDED : நவ 15, 2026 06:43 PM

கூடலூர்: கூடலூர், தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடந்தது.
கூடலூர், தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமை வகித்தார். விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு, யோகா, சிலம்பம், ஏரோபிக்ஸ், பிரமிட் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி சிறப்புரையாற்றினார். விழாவில் தேசிய அளவிலான ரிங் டென்னிஸ் போட்டியில், வென்ற மாணவர் பவாசு மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டை, கேக் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹசீனா , தேவர்சோலை பேரூராட்சி துணைத் தலைவர் யுனுஷ் பாபு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாசர், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
