UPDATED : நவ 15, 2026 06:42 PM
ADDED : நவ 15, 2026 06:40 PM
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை கிராமத்தில், குழந்தைகள் தின விழாவை ஒட்டி, முன்னாள் பாரத பிரதமர் நேரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டி வட்டாரத் தலைவர் மற்றும் இளம் படுகர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். காங்., மாவட்ட பொது செயலாளர் மணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், நேரு படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பாரத பிரதமராக நேரு பதவி விகித்த நேரத்தில், மக்களுக்காக அவர் செயல்படுத்திய திட்டங்களில் குறிப்பாக, 'ரோஜாவின் ராஜா' என அழைக்கப்படும் நேரு, பள்ளி குழந்தைகளிடம் காட்டிய அன்பு ஆகியவை குறித்து நினைவு கூறப்பட்டது.
தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் பீமன், பெள்ளிராஜ் மற்றும் ஜலந்திரா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
