குழந்தைகள் தினத்தில் மரக்கன்று குட்டீஸ்கள் அசத்தல்
குழந்தைகள் தினத்தில் மரக்கன்று குட்டீஸ்கள் அசத்தல்
UPDATED : நவ 15, 2026 06:40 PM
ADDED : நவ 15, 2026 06:40 PM

அ நிறம் | அளவு
பந்தலூர்: குழந்தைகள் தினத்தில், மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய குட்டீஸ்கள்.
பந்தலூர் அருகே தாளூர் பகுதியில், குதிரம்பம் பழங்குடியினர் கிராமத்தில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இயற்கை ஆர்வலர் சங்கீதா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் தின விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற குட்டீஸ்கள், தங்கள் வீடுகள் முன்பாக மரக்கன்றுகளை நடவு செய்து, அதனை வளர்ப்பதற்கு உறுதி எடுத்துக் கொண்டனர்.
குழந்தைகள் தின விழாவில் குட்டீஸ்கள் மரக்கன்றுகள் நடவு செய்து கொண்டாடியது கிராம மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
