/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேனாடு அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா
/
தேனாடு அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா
ADDED : ஏப் 17, 2025 09:09 PM

கோத்தகிரி; கீழ் கோத்தகிரி தேனாடு அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.
கீழ் கோத்தகிரி, தேனாடு அரசு தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். விழாவில், சமூகநீதி குறித்து, மாணவர்கள் தங்களது பேச்சுத்திறன் மற்றும் நடிப்பால் அசத்தினர்.
மேலும், நாட்டின் பிரதான பிரச்னைகளை எவ்வாறு அணுகவேண்டும். நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை ஆகியவை குறித்து மாணவர்கள் காட்சிப்படுத்தினர். குறிப்பாக, தமிழ் மொழியின் அடையாளம், அதன் சிறப்பு குறித்தும் விளக்கப்பட்டது. தவிர, அதிநவீன தொழில்நுட்பத்தால் அரங்கேற்றப்பட்ட நாடகம், நாட்டியம் பார்வையாளர்களை வெகுவாககவர்ந்தது. தேசிய விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார்.

