/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடி மாவனல்லா பகுதியில் புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
/
மசினகுடி மாவனல்லா பகுதியில் புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
மசினகுடி மாவனல்லா பகுதியில் புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
மசினகுடி மாவனல்லா பகுதியில் புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
ADDED : டிச 11, 2025 05:49 AM
கூடலுார்: மசினகுடி, மாவனல்லா பகுதியில் புலியை பிடிக்க கூடுதலாக ஒரு கூண்டு வைக்கப்பட்டது.
முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனல்லா பகுதியில், கடந்த, 24ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த, நாகியம்மாள், 60, என்பவரை புலி தாக்கி கொன்றது. வனத்துறையினர் புலியை பிடிக்க, 3 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில், 3ம் தேதி சிறுத்தை சிக்கியது. வன ஊழியர்கள் அதே பகுதியில், அதனை விடுவித்தனர். 8ம் தேதி காலை, மாவனல்லா பகுதியில் கன்று குட்டியை புலி தாக்கி இழுத்து சென்று கொன்றது.
மேலும், நேற்று முன்தினம், செம்மனத்தம் சாலையை ஒட்டிய பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்க முயற்சித்தது. அதனை பார்த்து மக்கள் சப்தமிட்டதால், புலி ஓடியது.
மாடு சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர், புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'நாகியம்மாளை தாக்கி கொன்ற புலி, கன்றுக்குட்டியை தாக்கி கொன்றுள்ளது. இரண்டு மாடுகளை தாக்கி காயப்படுத்தி உள்ளது. புலி மீண்டும் மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, கூண்டில் சிக்காத புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

