/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 11, 2025 05:49 AM

கூடலுார்: கூடலுார் கோழிக்கோடு சாலை, டி.கே.,பேட்டை அருகே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கூடலுார் நகராட்சி பகுதியில், திறந்தவெளியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து அகற்றி வருகின்றனர். எனினும், நகரின் சில பகுதிகளில், திறந்த வெளியில் சிலர் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கோழிக்கோடு சாலை, டி.கே., பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் திறந்து வெளியில் குப்பைகள் குவிந்துள்ளது. அவற்றை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருவதுடன், 'திறந்தவெளியில் குப்பைகளை கொட்ட வேண்டாம்,' என, அறிவுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கூறுகையில்,'நகராட்சி அதிகாரிகள் நகரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, திறந்த வெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.