/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சொதப்பலாகி போன அரசு கட்டட திறப்பு விழா; குத்து விளக்கு ஏற்றி -பேசாமல் சென்ற கொறடா
/
சொதப்பலாகி போன அரசு கட்டட திறப்பு விழா; குத்து விளக்கு ஏற்றி -பேசாமல் சென்ற கொறடா
சொதப்பலாகி போன அரசு கட்டட திறப்பு விழா; குத்து விளக்கு ஏற்றி -பேசாமல் சென்ற கொறடா
சொதப்பலாகி போன அரசு கட்டட திறப்பு விழா; குத்து விளக்கு ஏற்றி -பேசாமல் சென்ற கொறடா
ADDED : டிச 11, 2025 05:50 AM

பந்தலுார்: பந்தலுார் நுகர்பொருள் வாணிப கிடங்கு திறப்பு விழா நிகழ்ச்சியில், முறையான ஏற்பாடுகள் செய்யாததால், குத்துவிளக்கு ஏற்றியவுடன் அரங்கத்தை விட்டு அரசு கொறடா, கட்சி நிர்வாகிகளுடன் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பந்தலுாரில், மாநில நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 4.5 கோடி ரூபாய் மதிப்பில், தேசிய ஊரக வேளாண்மை வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டது. நேற்று இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சியில், காலை, 11:00 மணிக்கு திறந்து வைத்தார்.
அத்துடன், அரசு கொறடா ராமச்சந்திரன் தலைமையில் விழா நிகழ்ச்சி நடந்தது. அதில், மண்டல மேலாளர் கவுரி மணவாளன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அப்போது, 'மாநில முதல்வரின் நிகழ்ச்சியை திரையில் காணலாம்,' என, காலை முதல் காத்திருந்த மக்களுக்கு, ஏமாற்றம் தரும் வகையில், சிறிய லேப்டாபில் அரசுத்துறை அதிகாரிகள் மட்டும் பார்க்கும் வகையிலும், ஒலிபெருக்கி இல்லாமலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல்வர் கட்டடத்தை திறந்து வைத்த பின்னர், குத்துவிளக்கு ஏற்றி கொறடா மற்றும் முக்கிய நிர்வாகிகள், நிகழ்ச்சி குறித்து பேச முற்படும் முன்னர், அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.
மேலும், நிர்வாகிகளை வரவேற்க கொண்டு வந்த மலர் கொத்து, வழங்கப்படாமல் திருப்பி கொண்டு செல்லப்பட்டு வாகனத்தில் வைக்கப்பட்டது.
அதிருப்தியில் அரசு கொறாடா இதனால், அதிருப்தி அடைந்த ஒன்றிய செயலாளர் ராஜா,''அரசு சார்ந்த நிகழ்ச்சியில் நுகர்ப்பொருள் வாணிப கழக அதிகாரிகள், பெயரளவிற்கு ஏற்பாடுகளை செய்தது, பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது,'' என்றார்.
அதனை ஆமோதித்த அரசு கொறாடா ராமச்சந்திரன்,'' முதல்வரின் நிகழ்ச்சி குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யாமல் இருந்தது பெரும் அதிருப்தி அளிப்பதாக உள்ளது,'' என கூறி, கட்சி நிர்வாகிகளுடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து, ஒரு மணிநேரம் காத்திருந்த மக்கள் நிகழ்ச்சி துவங்கிய, 10 நிமிடத்தில் வெளியேறினர்.

