/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் தேவைக்கு கை கொடுக்கும் அப்பர்பவானி அணை
/
மின் தேவைக்கு கை கொடுக்கும் அப்பர்பவானி அணை
ADDED : பிப் 22, 2024 06:17 AM
ஊட்டி: கோடை காலத்தின் மின் தேவையை சமாளிக்கும் வகையில், அப்பர் பவானி அணையிலிருந்து, 5 அடி வரை தண்ணீர் எடுக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டம் அப்பர் பவானி அணை, 210 அடி உயரம் கொண்டு, மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படுகிறது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு, காட்டுகுப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் உள்ளிட்ட மின் நிலையங்களில், 455 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்தாண்டில், தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை போதி அளவில் பொய்யவில்லை. இதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்பு , 40 சதவீதமாக இருந்த நிலையில், படிப்படியாக மின் உற்பத்திக்கு தண்ணீர் எடுக்கப்பட்டது.
தற்போது, அணைகளில், 30 சதவீதமாக தண்ணீர் இருப்பு சரிந்துள்ளது. தினசரி மின் உற்பத்தியும், 200 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், கோடையில் மின் தேவையை சமாளிக்க மின்வாரியம் திணறி வருகிறது.
இந்நிலையில், குந்தா மின்வட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் நாள்தோறும் காலை, மாலை உச்ச மின் தேவைக்காக அப்பர் பவானி அணையிலிருந்து, 5 அடி வரையிாலான தண்ணீர் ராட்சத குழாய் வாயிலாக எடுக்கப்பட்டது. இதனால், அணையின் மொத்த அடியான, 210 அடியில், 95 அடி வரை தண்ணீர் இருப்பில் உள்ளது
மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மின் தேவைக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும் அணைகள்; தடுப்பணைகளில் தண்ணீர் அளவு அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. கோடையில் எதிர்பார்த்த அளவு மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பர்பவானி தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. கோடை மழை வந்தால் மட்டுமே, மின் பாற்றாக்குறையை சமாளிக்க முடியும்,' என்றார்.