குப்பைகளை தரம் பிரித்து வழங்கி துாய்மையை பாதுகாக்க வேண்டுகோள்
குப்பைகளை தரம் பிரித்து வழங்கி துாய்மையை பாதுகாக்க வேண்டுகோள்
ADDED : ஆக 20, 2026 07:22 PM
பந்தலுார்: பந்தலுாரில் நெல்லியாளம் நகராட்சி மற்றும் நுாலகம் இணைந்து, மெகா துாய்மை பணியை நடத்தி, துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
நுாலகர் அறிவழகன் வரவேற்றார். கமிஷனர் சசிகுமார் தலைமை வகித்து பேசுகையில், ‘‘மண்ணின் இயற்கை தன்மையை பாதுகாத்து சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். நிலத்தை பாழ்படுத்தும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகளை, துாக்கி எறிவது மற்றும் நீர் நிலைகளில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், நிலத்தின் இயற்கை தன்மை பாதித்து, நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க பொதுமக்கள் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து எடுத்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்கி ஒத்துழைக்க வேண்டும்,’’என்றார்.
தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி மேலாளர் சுகுமார், வாசகர் வட்ட தலைவர் முத்துக்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், காந்தி சேவா மைய அமைப்பாளர் நவ்ஷாத் உட்பட பலர் பங்கேற்றனர், நுாலகர் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.
