ADDED : செப் 23, 2026 05:52 PM
கோத்தகிரி: நீலசிரி மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் முற்றிலும் தொகுப்பூதியம் அடிப்படையில், இளநிலை உதவியாளர், பதிவேடு எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தருக்கு மாதம் தொகுப்பூதியம், 20,000 மற்றும் அலுவலக உதவியாளருக்கு, 13,000 ஆயிரம் ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர், 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை, www.nilgiris.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்தும், அல்லது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில், அக்., 7ம் தேதி, மாலை, 5:30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
