/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மார் 09, 2024 07:14 AM
ஊட்டி : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதில், முதுநிலை ஆலோசகர், ஒரு பணியிடத்திற்கு, சமூக பணி ஆலோசனை உளவியல் அல்லது மனித வள மேலாண்மையில் முதுநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரானவன்முறையில் ஒருவரிடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் இருக்க வேண்டும். உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம், 20 ஆயிரம் ரூபாய்.
சமூகநல தனியாளர், 3 பணி இடத்திற்கு, ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்களில் பணிப்புரிந்தவர்கள் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,' இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் உள்ளவர்கள், நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், ஊட்டி என்ற முகவரியில் வரும், 22ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்,' என, கூறியுள்ளார்.

