/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின கிராமத்தில் சேவை; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
பழங்குடியின கிராமத்தில் சேவை; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பழங்குடியின கிராமத்தில் சேவை; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பழங்குடியின கிராமத்தில் சேவை; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 22, 2025 11:35 PM

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, போத்துக்கொல்லி பகுதியில், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத்தின் மேற்பார்வையில், பனியர் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பனியர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கான பல்வேறு மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிராமத்தில் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், மருத்துவமனை ஆகியவற்றை, ஊட்டி லாரன்ஸ் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வாரம் கிராமத்தில் தங்கியிருந்து, பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாயக்கூடத்தின் மேற் கூரைகள் மாற்றப்பட்டு, புதிதாக பழங் குடியின குழந்தைகளுக்கு சமையல் அறை கட்டி, கட்ட டம் முழுவதும் வர்ணம் பூசி பொலிவுப்படுத்தினர். பழங் குடியின கிராமத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் சமுதாயக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையத்தை பழங்குடியின மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க நிர்வாகி புஷ்ப குமார் தலைமை வகித்தார்.
எம். எல். ஏ. ஜெயசீலன், பள்ளி முதல்வர் வெங்கட சோமேஸ்வரராவ், நாட்டு நல பணி திட்ட அலுவலர் குல்தீப் சிங், சகாதேவன், திட்ட அலுவலர் விஜயா, திட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.