/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகள்; விலங்குகளுக்கு ஆபத்து; சூழலுக்கு கேடு
/
சாலையோரம் வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகள்; விலங்குகளுக்கு ஆபத்து; சூழலுக்கு கேடு
சாலையோரம் வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகள்; விலங்குகளுக்கு ஆபத்து; சூழலுக்கு கேடு
சாலையோரம் வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகள்; விலங்குகளுக்கு ஆபத்து; சூழலுக்கு கேடு
ADDED : அக் 22, 2025 11:34 PM

கூடலூர்: இரும்புபாலம் ஆற்றை ஒட்டி வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகளால் ஆற்று நீர் மாசுபடுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளனர். அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
கூடலூர் பகுதியை ஒட்டிய தமிழக ---- கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், நீலகிரிக்கு வரும் வெளி மாநில சுற்றுலா வாகனங்களில் சோதனை மேற்கொண்டு, அவர்கள் எடுத்து வரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், நீலகிரிக்கு வரும் கேரளா சுற்றுலா பயணியர் தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து வந்து, கோழிக்கோடு சாலையோரங்களில் அமர்ந்து உட்கொண்டு பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் தட்டுகள் வனத்தை ஒட்டிய சாலையோரங்களில் வீசி எறிவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இரும்புபாலம் ஆற்றை ஒட்டிய கோழிக்கோடு சாலையோரம் சுற்றுலா பயணியர் வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அங்கு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், குடிநீருக்காக பயன்படுத்தி வரும் ஆற்று நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆற்றை ஒட்டிய சாலையோரம், கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதுடன், அப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி எறிவதை தடுக்க அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.