/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலுவை கட்டண பாக்கி: குடிநீர் இணைப்பு துண்டிப்பு
/
நிலுவை கட்டண பாக்கி: குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ADDED : பிப் 16, 2024 12:19 AM

கூடலுார்;கூடலுார் நகராட்சியில், நிலுவை குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர்.
கூடலுார் நகராட்சியில், நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை செலுத்த நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எனினும் பலர், குடிநீர் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக சில ஆண்டுகள் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின், விவரங்களை நகராட்சி ஊழியர்கள் சேகரித்து, அவர்கள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை நேற்று துவக்கினர்.
நகராட்சி பணி மேற்பார்வையாளர் பிரதீப் தலைமையில் குடிநீர் மேற்பார்வையாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள், ஹெல்த் கேம்ப், நகராட்சி அலுவலகம் அருகே, இரண்டு வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தை தொடர்ச்சியாக செலுத்தாதவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை உடனடியாக அலுவலகத்தில் செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கலாம்,' என்றனர்.