/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கைரளியில் கலை போட்டிகள்: அசத்திய மாணவ, மாணவிகள்
/
கைரளியில் கலை போட்டிகள்: அசத்திய மாணவ, மாணவிகள்
ADDED : ஆக 19, 2025 09:08 PM

குன்னுார்:
குன்னுார் அருவங்காடு கைரளி அருவங்காடு அமைப்பு சார்பில், கலை போட்டிகளில் மாணவ, மாணவியர் அசத்தினர்.
குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் செயல்பட்டு வரும், 'கைரளி அருவங்காடு' அமைப்பின், 35வது ஆண்டு ஓணம் திருவிழா 'கலசம் சர்கிர உற்சவம் -2025' என்ற பெயரில், கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓவிய போட்டிகள் நடந்தன.
இரண்டாம் கட்டமாக, 'பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள், வாத்திய இசை, பாடல்கள்,' என, தனி நபர், குழு போட்டிகள், பேன்சி டிரஸ் போட்டிகள் நடந்ததில், 30 பள்ளிகளை சேர்ந்த, 600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தலைவர் நவீன் ஜேம்ஸ் தலைமை வகித்தார். செயலாளர் ஆண்டனி கில்ஷன், பிமோத், அனிஸ் குட்டன் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகள நிர்வாகிகள் சயுஜ், மோகனன், அஜய், கிரிஷ், உட்பட மகளிர் குழுவினர் செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வரும், 24ம் தேதி, பரிசுகள் வழங்கப்பட உள்ளது.