ADDED : நவ 14, 2025 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, பாரம்பரிய கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
வாழ்வியலை மேம்படுத்தும் பாரம்பரிய கலைகள், விளையாட்டுகள் சமீப காலமாக மாறிவருகிறது. நாகரிகம் என்ற பெயரில் அரங்கேறும் நவீன கலாசார சீரழிவுகளை தடுத்து, மீண்டும் நமது பாரம்பரிய தமிழர் கலைகள், விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சிகள், பள்ளிகளில் நடந்து வருகிறது. இதனை தன்னார்வ அமைப்புகள் முன்னெடுத்து நடத்தி வருகின்றன.
அதன்படி, கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில், தன்னார்வலர் நாட்டுப்புற கலைஞர் கணேசன் தலைமையில், பாரம்பரிய கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், ஒயிலாட்டம், பறை இசை, பறையாட்டம் மற்றும் பரதம் ஆகிய கலை பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.

