/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.6.52 கோடியில் செயற்கை இழை மைதானம்; ராணுவ வீரர்கள் பயிற்சிக்கு திறப்பு
/
ரூ.6.52 கோடியில் செயற்கை இழை மைதானம்; ராணுவ வீரர்கள் பயிற்சிக்கு திறப்பு
ரூ.6.52 கோடியில் செயற்கை இழை மைதானம்; ராணுவ வீரர்கள் பயிற்சிக்கு திறப்பு
ரூ.6.52 கோடியில் செயற்கை இழை மைதானம்; ராணுவ வீரர்கள் பயிற்சிக்கு திறப்பு
ADDED : பிப் 07, 2025 08:25 PM

குன்னுார்; குன்னுார் ராணுவ மையம் சார்பில், 6.52 கோடி ரூபாய் மதிப்பில், ராணுவ வீரர்களுக்காக அமைக்கப்பட்ட, 8 'டிராக்' கொண்ட செயற்கையிழை ஓடுதளத்தை, தென் பிராந்திய மைய ஜெனரல் கமாண்டிங் அலுவலர் லெப். ஜெனரல் கரன்பீர் சிங் திறந்து வைத்தார்.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கட்டுப்பாட்டில், தங்கராஜ் நினைவு மைதானம் உள்ளது.
இந்த மைதானத்தில், ராணுவ தடகள வளர்ச்சி பிரிவு சார்பில், 6.52 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில், 8 'டிராக்' கொண்ட ஓடுதளம் அமைக்கும் பணி, 6 மாத காலம் நடந்தது.
நேற்று நடந்த இதற்கான துவக்க விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தென் பிராந்திய மைய ஜெனரல் கமாண்டிங் அலுவலர் லெப். ஜெனரல் கரன்பீர் சிங் திறந்து வைத்தார். அப்போது, தடகள மாணவர் ஒருவரை அழைத்து ரிப்பன் வெட்ட வைத்தார்.
பணிகளின் திட்ட அலுவலராக இருந்த எம்.ஆர்.சி., உடற்கல்வி பயிற்சி அலுவலர் மேஜர் சச்சின் சிங் குந்தல், பொறியாளர் சதீஷ் ஆகியோர் செயற்கை இழை மைதான பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மைய கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாக, 8 'டிராக்' கொண்ட செயற்கை இழை மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு சிறந்த தடகள பயிற்சி அளிக்கப்படும். பள்ளி,கல்லுாரி விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனு மதிக்கப்படும்,'' என்றார்.
எம்.ஆர்.சி., ராணுவ தடகள வீரர்கள் வென்ற கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் மைதான சிறப்புகள் குறித்து தகவல் இப்பகுதியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.