செயற்கை மலை அமைத்து நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணியர் ரசிப்பு
செயற்கை மலை அமைத்து நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணியர் ரசிப்பு
ADDED : ஆக 16, 2026 05:21 PM

கூடலூர், ஆக. 17–
-
கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில், செயற்கை மலை அமைத்து உருவாக்கியுள்ள நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகிறது.
கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் சுற்றுலாப் பயணியரை கவரும் வகையில் காட்சி முனை, நன்னீர் மீனகம், பெரணி கண்ணாடி இல்லம், நீர் தாவரங்கள், ஆர்க்கிடோரியம் கண்ணாடி மாளிகை, ஆர்கிட் பசுமைக்குடில், மியூசியம் அமைக்கப்பட்டு இருப்பதுடன், ஜிப்லைன் சாகச சுற்றுலா , மலையேற்றம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதன் நுழைவு வாயில் பகுதியில், கற்கள் மற்றும் சிமெண்டில் செயற்கையான மலை அமைத்து, செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தி உள்ளனர். இயற்கையான மலையில் உள்ள நீர்வீழ்ச்சி போன்று காட்சியளிப்பது, சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுலா பயணியர் இதனை ரசித்து, செல்பி எடுத்து செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
