ADDED : நவ 12, 2026 05:27 PM

பாலக்காடு: ரூ.21,000 மதிப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாலக்காடு மாவட்ட ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட மருத்துவ அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.
இன்று (நவ.,12) காலை, 10:00 மணிக்குத் தொடங்கிய பேரணியை, சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஹம்சா தொடங்கி வைத்தார். சங்கத்தலைவர் அஜிதா தலைமை தாங்கினார்.
செயலாளர் ரமணி, பொருளாளர் ஹேமலதா, மாநிலக்குழு உறுப்பினர் ரேணுகா, சி.ஐ.டி.யு பொருளாளர் நவுஷாத் ஆகியோர் உரையாற்றினர்.
முதல்வர் முன்பு அறிவித்த, ரூ.21,000 மதிப்பூதியம் மற்றும் 'ஷைலி' செயலிப் பணிகளுக்கான உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையை முன்தேதியிட்டு வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளைத் திரும்ப வழங்க வேண்டும்.
மேலும், அத்துமீறிய வார்டு மாற்றம், அதிகப்படியான வேலைப்பளு, மருத்துவ விடுப்புக்கான காலவரம்பு மற்றும் அதிகாரிகளின் துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும் எனப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
