தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காட்டு யானை பிரச்னை; பொது மக்கள் போராட்டம்

காட்டு யானை பிரச்னை; பொது மக்கள் போராட்டம்

காட்டு யானை பிரச்னை; பொது மக்கள் போராட்டம்


UPDATED : நவ 12, 2026 05:42 PM

ADDED : நவ 12, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 05:42 PM ADDED : நவ 12, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் போஸ்பார பகுதியில், காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலுார் போஸ்வரா மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, முதுமலையிலிருந்து காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்துறை சார்பில், முதுமலை வன எல்லையை ஒட்டி அகழி அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், முதுமலை முதுகுழி சாலை சங்கிலிகேட் வழியாக, காட்டு யானைகள் போஸ்பாரா பகுதிக்கு நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனை தடுக்க சங்கிலிகேட் அருகே, அகழியை ஒட்டி, முதுகுழி சாலை குறுக்கே வனத்துறை சார்பில், கடந்த மாதம் சோலார் மின்வேலி அமைத்தனர்.

சில காட்டு யானைகள், அகழியை சேதப்படுத்தி, இரவில் போஸ்பாரா மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும் அதனை தடுக்க முடியவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த மக்கள், காட்டு யானைகள் பிரச்னையை தடுக்க வலியுறுத்தி, போஸ்வரா சங்கிலிகேட் பகுதியில் நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, வனத்துறை நடத்தி பேச்சு வார்த்தையில்,‘இப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை முதுமலை பகுதிக்கு விரட்டுவதுடன், சேதமடைந்த அகழியை சீரமைத்து, யானை இப்பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளிக்கப்பட்டது. அதனை ஏற்று மக்கள் தற்காலிகமாக போராட்டம் கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us