/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உதவி செயற்பொறியாளருக்கு லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை
/
உதவி செயற்பொறியாளருக்கு லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை
உதவி செயற்பொறியாளருக்கு லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை
உதவி செயற்பொறியாளருக்கு லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை
ADDED : ஜன 09, 2024 10:43 PM

ஊட்டி;லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவி செயற்பொறியாளருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியை சேர்ந்த ராஜபிரகாஷ் என்பவர் மின்கம்பத்தை மாற்றி அமைக்க, கோத்தகிரி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாசை அணுகியுள்ளார். மின்கம்பத்தை மாற்றி அமைக்க, ஜெயபிரகாஷ், 55, 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜபிரகாஷ், ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பின், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய, 4,000 ரூபாய் பணத்தை ராஜபிரகாசிடம் கொடுத்து அனுப்பினர். கடந்த, 2014ம் ஆண்டு ஆக., 13ம் தேதி லஞ்ச பணத்தை ஜெயபிரகாசிடம், ராஜபிரகாஷ் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வழக்கு, ஊட்டியில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், ஜெயபிரகாஷ்க்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். பின், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ் வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் ரேணுகா கார்த்திகேயன் ஆஜரானார்.

