/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் வீராங்கனைகளுக்கு தடகள போட்டிகள்: ஊட்டியில் 17ல் துவக்கம்
/
பெண் வீராங்கனைகளுக்கு தடகள போட்டிகள்: ஊட்டியில் 17ல் துவக்கம்
பெண் வீராங்கனைகளுக்கு தடகள போட்டிகள்: ஊட்டியில் 17ல் துவக்கம்
பெண் வீராங்கனைகளுக்கு தடகள போட்டிகள்: ஊட்டியில் 17ல் துவக்கம்
ADDED : நவ 06, 2025 11:04 PM
ஊட்டி: - ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி மைதானத்தில் வரும், 17ம் தேதி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடக்கிறது.
நீலகிரி மாவட்ட தடைகள சங்க செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை;
இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, மத்திய அரசின் ஆதரவுடன், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறமையான பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து, அவர்களை உலக அளவிலும், ஒலிம்பிக் அளவிலும் பங்கேற்க செய்து, வெற்றி பெற அனைத்து விதமான உதவிகள் அளிக்கப்படுகிறது. அதன்படி, 'அஸ்மிதா லீகு' என்ற பெயரில், 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட, பெண் வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் தேர்வு முதல் கட்டமாக, நாட்டில், 300 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், நீலகிரி மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட அளவிலான இந்த தடகள போட்டிகள், வரும், 17ம் தேதி ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டில் மைதானத்தில் நடக்கிறது. அதில், 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள், 2011, டிச., 21 மற்றும் 2013, டிச., 20க்குள் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சிகள் 1. டிரையத்லான் ஏ- 60 மீ நீளம் தாண்டுதல் (5 மீ., அணுகுமுறை), உயரம் தாண்டுதல் (கத்திரிக்கோல்)
2. டிரையத்லான் பி - 60 மீட்டர் நீளம் தாண்டுதல் (5 மீட்டர் அணுகுமுறை) ஷாட் புட் ஒரு சிலோ (பின்புறம் எரிதல்)
3. டிரையத்லான் சி- 60 மீ., நீளம் தாண்டுதல் (5 மீ., அணுகுமுறை) 600 மீ.,
4. ஐந்து மீ., ஓடு பாதையுடன் கூடிய கிட்ஸ் ஜாவலைன். 60 மீ. , உயரம் தாண்டுதல், 600 மீ., நீளம் தாண்டுதல் (கத்திரிக்கோல்) 5 மீ., குண்டு எறிதல் 3 கிலோ, ஈட்டி எறிதல் 10 மீ., போட்டியில் பங்கேற்பவர்கள், 94430 66112 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். 11, 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள், 2007 அக்,, 15 மற்றும் 2009, அக்., 14 க்கு இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

