/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்களை சேதப்படுத்தி மர்ம நபர்கள் அட்டூழியம்
/
வாகனங்களை சேதப்படுத்தி மர்ம நபர்கள் அட்டூழியம்
ADDED : அக் 31, 2025 11:49 PM

கோத்தகிரி: கோத்தகிரி அருகே, வாகனங்களை மோதி சேதம் ஏற்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோத்தகிரி -- ஊட்டி சாலையில் அமைந்துள்ள பாக்கியநகர் மக்கள், இருசக்கர, ஜீப், கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வேறு வாகனங்களில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
சில வாகனங்கள், சாலை தடுப்பை உடைத்து பள்ளத்தில் விழும் நிலையில் தொங்கி நிற்கின்றன. அதிகாலையில் வாகனங்களை பார்த்த உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். அதன்படி, கோத்தகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சேதமடைந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.
பிறகு, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

