ADDED : ஆக 25, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், லக்கிடி மங்கலம் வாணோப்பாடம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன், 64. லக்கிடி கூட்டுப்பாதை ஆட்டோ ஸ்டாண்டில், ஓட்டுநராக இருந்தார்.
நேற்று முன்தினம் பயணியருடன் நகரிப்புறம் பகுதியிலிருந்து, ஒலவக்கோடு பகுதிக்கு ஆட்டோ ஓட்டி சென்றார்.
மங்கரை கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது.
படுகாயமடைந்த வாசுதேவனை மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆட்டோவில் பயணித்த இரண்டு பயணியர் லேசான காயங்களுடன் தப்பினர். இச்சம்பவம் குறித்து, மங்கரை விசாரிக்கின்றனர்.
