/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேசினோ சந்திப்பில் குப்பை அகற்றிய ஆட்டோ டிரைவர்கள்
/
கேசினோ சந்திப்பில் குப்பை அகற்றிய ஆட்டோ டிரைவர்கள்
கேசினோ சந்திப்பில் குப்பை அகற்றிய ஆட்டோ டிரைவர்கள்
கேசினோ சந்திப்பில் குப்பை அகற்றிய ஆட்டோ டிரைவர்கள்
ADDED : டிச 13, 2025 07:57 AM

ஊட்டி: ஊட்டி கேசினோ சந்திப்பில் குவிந்து கிடந்த குப்பையை ஆட்டோ டிரைவர்கள் அகற்றினர்.
ஊட்டி பிரீக்ஸ் பள்ளி சாலையில் கேசினோ சந்திப்பு அமைந்துள்ளது. இப்பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் சில நாட்களாக அகற்றப்படாமல் இருந்தன. சாலையில் சிதறி கிடந்தன. மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் குப்பைகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதி ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள் நேற்று காலை குப்பையை அகற்றி துாய்மை பணியில் இறங்கினர்.
மக்கள் கூறுகையில்,'நகரின் மையப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.