/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்
/
தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்
தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்
தானியங்கி கேமரா திருட்டு; போலீசில் வனத்துறை புகார்
ADDED : டிச 04, 2024 09:49 PM
கூடலுார்; கூடலுார் வன கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்புக்காக வைக்கப்பட்ட, 2 தானியங்கி கேமராக்கள் காணாமல் போனது குறித்து வனத்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கூடலுார் வனக்கோட்டத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள், சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம், 3ம் தேதி துவங்கியது. இதற்காக, 105 இடங்களில் தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
ஒரு மாதம் நடைபெற்ற இப்பணி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. தொடர்ந்து, கேமராக்கள் அகற்றப்பட்டு, அதில் பதிவான படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் கணக்கெடுப்பு தகவல் வெளியாகும்.
இதனிடையே, நந்தட்டி அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்புக்காக பொருத்தப்பட்ட, 2 தானியங்கி கேமராக்களை காணவில்லை. இது குறித்து, வனத்துறையினர் கூடலுார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.