/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும்; மண் வளம் பாதுகாக்க கருத்தரங்கில் தகவல்
/
ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும்; மண் வளம் பாதுகாக்க கருத்தரங்கில் தகவல்
ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும்; மண் வளம் பாதுகாக்க கருத்தரங்கில் தகவல்
ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும்; மண் வளம் பாதுகாக்க கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜன 01, 2026 06:53 AM

கோத்தகிரி: கோத்தகிரியில் ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், இயற்கை உர பயன்பாட்டிற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வது தொடர்கிறது.
மாவட்டத்தை, இயற்கை விவசாயம் மாவட்டமாக மாற்ற, தோட்டக்கலை துறை மூலம், நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூடுமானவரை, கிராமப்புற விவசாயிகள் மெல்ல, மெல்ல இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
'மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும், இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்,' என, முன்னெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில், 'கிசான் சங்கோஷ்டி' திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு, கருத்தரங்கு நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி கூக்கல்தொறை பகுதியில் கருத்தரங்கு நடந்தது.
மத்திய அரசு மெட்ராஸ் உர நிறுவனம் சார்பில், நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் தோட்டக்கலை துறை, வேளாண் துறை, கே.வி.கே., மற்றும் மெட்ராஸ் உர நிறுவனத்தை சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், 'ரசாயன உரங்களின் பயன்பாட்டால், மண்வளம் பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை அழிவதுடன், பயிர்களில் நச்சு தன்மை அதிகரிக்கிறது. இந்த உணவை பயன்படுத்துவோருக்கு, உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால், ரசாயன உரங்களை முழுமையாக தவிர்த்து இயற்கை உர பயன்பாட்டிற்கு விவசாயிகள் முக்கியத்துவம் வழங்க வேண்டும்,' என்றனர்.
இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்று பயனடைந்ததுடன், 'படிப்படியாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, தாய் மண்ணின் வளத்தை மேம்படுத்துவோம்,' என, உறுதி மொழி அளித்தனர்.

